நமஸ்காரம்/ஆசீர்வாதம்

அனைத்துலக ஆதிசைவ சிவாசாரிய மாணவர்கள் ஆலய நித்ய நைமித்திக காமிய பூஜைகளையும் கும்பாபிஷேக மகோற்சவ பத்ததிகளையும் இணையதளத்தின் வாயிலாக கற்றுணர்ந்து தேர்ச்சி பெற்று சிறப்புற உலக நன்மைக்காக பணியாற்றிடவேண்டும் என்பதற்காக சிவபுரம் க்ளோபல் சிவாகம அகாதமி எனும் இணையதளம் மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகமபாடசாலையின் மூலம் துவங்கப்பட்டுள்ளது. ஓராண்டு மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டுகள் என பயிற்சிக்காலங்களும் அதற்கான சான்றிதழ் விருதுகளும் வழங்கப்பட உள்ளன. சிவாசாரியப் பெருமக்கள் தாங்கள் விரும்பும் பயிற்சிப்பகுதியை தேர்வு செய்து பயின்றிட பயிற்சி விபரங்களை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.

அனைத்துலக அந்தணப் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள். தங்கள் வீட்டிலிருக்கும் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே சந்தியாவந்தனம் மற்றும் வேதபாடங்களைக் கற்கவும், பெண்கள் லலிதா சகஸ்ரநாமம் விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் ஸ்தோத்ரங்கள் பயிலவும் சிவபுரம் க்ளோபல் சிவாகம அகாதமி எனும் இணையதளம் துவங்கப்படுள்ளது. இதன்மூலம் தாங்கள் விரும்பும் பாடத்திட்டத்தை தேர்வு செய்ய பயிற்சி விபரங்களையறிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.